தந்தையின் தாக்குதலில் மகன் ஒருவர் உயிரிழந்த சம்பவம் ஒன்று பதிவாகி உள்ளது .

 


மதுபோதையில் வந்து தாயைத் தாக்கிய மகன் தந்தையின் தாக்குதலில் உயிரிழந்துள்ளார்.

அனுராதாபுரத்தில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதன்போது 25 வயதான வினுர விரஞ்சனா என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த இளைஞர், வீட்டில் அவரது தந்தை, தாய் மற்றும் உடன்பிறந்தவர்களுடன் வசித்து வந்தார் எனவும், பத்து ஆண்டுகளுக்கு முன்பு வாகன விபத்தில் அவரது வலது கால் பகுதி அகற்றப்பட்டது எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 இறந்தவர் தினமும் குடித்துவிட்டு வந்து தனது தாய், தந்தை மற்றும் சகோதரர்களை அவர் தாக்கி வந்துள்ளார்.

நேற்றிரவும் குடித்துவிட்டு வந்து தாயை அவர் தாக்கிய போது, தந்தை தலையிட்டு அவரைத் தாக்கியதில் அவர் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.