முட்டைக்கு அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயித்து புதிய வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ள நிலையில், சந்தையில் மீண்டும் முட்டைக்கான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக, வர்த்தகர்கள் மற்றும் நுகர்வோர் தெரிவிக்கின்றனர். கடந்த 20 ஆம் திகதி முட்டைக்கு அதிகபட்ச விலை நிர்ணயம் செய்யப்பட்டு வர்த்தமானி வெளியிடப்பட்டது. இதன்படி, வெள்ளை முட்டைக்கு அதிகபட்ச சில்லறை விலை 44 ரூபாவும், சிவப்பு முட்டைக்கு 46 ரூபாவும் நிர்ணயிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.