கிழக்கிலங்கையில் முதலாவது வேதாகம பாடசாலை ஆரம்பித்து வைப்பு!!

 










கிழக்கிலங்கையில் முதலாவது வேதாகம பாடசாலை ஒன்று கிழக்கிலங்கை இந்துக் குரமார் ஒன்றியத்தினால் உத்தியோக பூர்வமாக மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
கிழக்கிலங்கை இந்துக்குருமர் ஒன்றியத்தின் களுவாஞ்சிகுடி கிளைத்தலைவர் அங்குச சர்மா குருக்கள் அவர்களின் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்ட ஆரம்ப நிகழ்வில் கிழக்கிலங்கை இந்துக்குருமார் ஒன்றியத்தின் தலைவர் லோகநாதக் குருக்கள், உள்ளிட்ட பல சிரேஸ்ட குருமார்கள், சிவாச்சாரியார்கள், கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்தனர்.
ஆரம்பத்தில் ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையாருக்கு பூஜை வழிபாடுகளில் ஈடுபட்ட பின்னர் மாணாக்கர்களுக்கு பிரதம குருமார்களால் அறிவுரைகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து கிழக்கிலங்கை இந்துக்குருமார் ஒன்றியத்தின் தலைவர் லோகநாதக் குருக்கள் அவர்களால் வேதாக பாடலை ஆசிரியர்களாக தெரிவு செய்யப்பட்ட இரு குருமாருக்கான நியமனக் கடிதங்களை வழங்கி வைத்தார்.
பின்னர் இதன்போது நியனம் பெற்ற இரு குருமார் உத்தியோக பூரமாக வேதாகக் கல்வியை இதன்போது ஆரம்தித்து வைத்தனர். இப்பாடசாலை தினமும் குறிப்பிட்ட நேரத்திற்கு களுவாஞ்சிகுடி ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தில் நடைபெறும் எனும் என இதன்போது அறிவிப்பட்டது.
கிழக்கிலங்கையில் தாம் பல்வேறு வேலைத்திட்டங்களைச் செய்து வருவதாகவும். கிழக்கில் இந்து சமய நெறிமுறைகளை சீரமைத்து கட்டுக்கோப்புக்குள் கொண்டு வருவதற்காகவும், இளம் குருமாரை முறையாகப் பயிற்றுவிப்பற்காக வேண்டி கிழக்கில் இந்த முதலாவது வேதாகம பாடசாலை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இதன்போது கலந்து கொண்ட பிரதம குருமார் தெரிவித்தனர்.