மட்டக்களப்பு பட்டிருப்புத் தேர்தல் தொகுதியில் உள்ளூராட்சி மன்றத்
தேர்தலில் போட்டியிடவுள்ள, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வேட்பாளர்களை
அறிமுகம் செய்யும் நிகழ்வும், பிரசாரக் கூட்டமும்
இன்று இடம்பெற்றது.
இலங்கை
தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு பட்டிருப்பு தொகுதி கிளையின் செயலாளர்
துசினந்தன் தலைமையில் நடைபெற்ற வேட்பாளர் அறிமுகம் மற்றும் பிரசாரக்
கூட்டத்தில்,
மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்
இரா.சாணக்கியன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான
பா.அரியநேத்திரன்,ஞா.சிறிநேசன்,சீ.யோகேஸ்வரன் உட்பட பலர்
கலந்துகொண்டனர்.
இதன்போது
பட்டிருப்பு தொகுதியில் உள்ள உள்ளுராட்சிமன்றங்களில் போட்டியிடும்
வேட்பாளர்கள் இதன்போது அறிமுகம் செய்துவைக்கப்பட்டதுன் பிரசார உரைகளும் நடைபெற்றன.