உள்ளூராட்சி மன்றத் தேர்தலை, சட்டத்திற்கு அமைவாக நடத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளதாக உயர் நீதிமன்றத்துக்கு தேர்தல்கள் ஆணைக்குழு இன்று அறிவித்துள்ளது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் ஓய்வுபெற்ற இராணுவ கேணல் ஒருவரினால் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான மூவரடங்கிய நீதியரசர்கள் அமர்வு முன்னிலையில் இன்று அழைக்கப்பட்டது.
அதன்போது, தேர்தல்கள் ஆணைக்குழு சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் இதனைத் தெரிவித்தார்.
இந்த மனுவை எதிர்வரும் 18 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை மார்ச் 10 ஆம் திகதிக்கு முன்னர் நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு எடுத்த தீர்மானத்தை இரத்து செய்யும் உத்தரவை பிறப்பிக்குமாறு ஓய்வுபெற்ற கேணல் விஜேசுந்தர தமது மனுவில் கோரியிருந்தார்.