நாட்டின் அடுத்த ஜனாதிபதியாக ரணசிங்க பிரேமதாஸவின் மகன் சஜித் பிரேமதாஸவே வருவார் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் ஆஸ்தான சோதிடர் சுமணதாஸ அபேகுணவர்த்தன தெரிவித்துள்ளார். சஜித் ஒரு நல்ல மற்றும் அறிவார்ந்த தலைவர் எனவும் அவருக்கு கஜகேசரி என்ற யோகம் மிகவும் சக்தி வாய்ந்தது, எதிர்காலத்தில் அவர் நாட்டின் ஜனாதிபதியாக வருவார் எனவும் சுமணதாஸ தெரிவித்துள்ளார். அத்துடன், 2015ஆம் ஆண்டின் பின்னர் மகிந்த ராஜபக்ஷ குடும்பத்துடன் தமக்கு தொடர்பு இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.