சந்தேகத்திற்கிடமான வகையில் நாடாளுமன்றத்தை படமெடுத்த இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இருவரும், நாடாளுமன்றத்திற்கு நுழையும் வீதி வழியாக உள்ள தியவன்னா ஓயாவுக்கு அருகில் நின்று நாடாளுமன்ற வளாகத்தை தொலைபேசி மூலம் படமெடுத்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சந்தேக நபர்கள் நாடாளுமன்ற வளாகத்தை படமெடுத்ததற்கான காரணத்தை வெளியிடாமையினால் தொடர்ந்து அவர்களிடத்தில் விசாரணை இடம்பெறுவதாக தலங்கம காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.