உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான கட்டுப்பணத்தை ஏற்காதிருப்பதற்கு அமைச்சரவையில் தீர்மானம் எடுக்கப்படவில்லை என பிரதமர் தினேஷ் குணவர்தன பாராளுமன்றத்தில் இன்று(17) தெரிவித்தார்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான கட்டுப்பணத்தை ஏற்க வேண்டாம் என பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் நீல் ஹப்புஹின்ன அண்மையில் தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகளுக்கு கடிதம் மூலம் தெரிவித்திருந்தார்.
எவ்வாறாயினும், தொழில்நுட்ப கோளாறு உள்ளதாக தெரிவித்து சில மணித்தியாலங்களுக்குள் குறித்த கடிதம் மீளப்பெறப்பட்டமை குறிப்பிடத்தக்கது.