ஆதர்ஷா கரந்தனா தாக்கல் செய்த முன் பிணை மனு நிராகரிக்கப்பட்டது .

 


ஜனாதிபதியின் முன்னாள் ஆலோசகரும் பேராசிரியருமான ஆஷூ மாரசிங்கவினால் தனது நாய் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக கூறி ஆதர்ஷா கரந்தனா தாக்கல் செய்த முன் பிணை மனுவை கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸ், செவ்வாய்க்கிழமை (10) நிராகரித்தார்.

பேராசிரியர் ஆஷூ மாரசிங்கவின் முறைப்பாட்டுக்கமைய குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் தான் கைது செய்யப்பட்டால், தன்னை முன் பிணையில் விடுவிக்குமாறு உத்தரவிட கோரி ஆதர்ஷா குறித்த பிணை மனுவை தாக்கல் செய்திருந்தார்.

பிணை விண்ணப்பதாரரின் கோரிக்கை தற்போதைக்கு ஏற்பது பொருத்தமானது அல்ல என்று அறிவித்த நீதவான், பிணைக் கோரிக்கையை நிராகரித்தார்.

ஆஷூ மாரசிங்கவின் காதலி என்று கூறப்படும் ஆதர்ஷா, தனது நாயை ஆஷூ மாரசிங்க பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியதாக ஊடகவிலாளர் சந்திப்பில் தெரிவித்ததுடன், அதுகுறித்த வீடியோவையையும் பகிர்ந்திருந்தார்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவுடன் இணைந்தே ஆஷு மாரசிங்கவுக்கு எதிராக ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்திய ஆதர்ஷா, குறித்த விடயத்தை அறிவித்த நிலையில், அந்த விடயம் வைரலாகியது.