சிறிலங்கா அதிபருடன் முன்னெடுக்கப்படும் பேச்சுவார்த்தைகளில் தமிழ் கட்சிகளை ஒன்றிணையுமாறு கோரி மட்டக்களப்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக இன்று ஒன்றுகூடிய மக்கள், தமிழ் மக்களின் தீர்வு விடயத்தில் தமிழ் அரசியல் கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்த செயற்பாடுகளை முன்னெடுப்பதன் மூலமே தமிழ் மக்களுக்கான தீர்வினை பெற்றுக் கொடுக்க முடியும் எனத் தெரிவித்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.