கந்தையா குருபரன் எழுதிய "தாயாகிய தனித்துவம்" நூல் அறிமுக விழா!!

 














வைத்திய கலாநிதி கந்தையா குருபரன் எழுதிய "தாயாகிய தனித்துவம்" நூல் அறிமுக விழா
மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை மகாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியகலாநிதி ஜி.சுகுணன் தலைமையில் இடம்பெற்ற நூல் வெளிட்டு நிகழ்விற்கு அதிதிகளாக கிழக்கு பல்கலைக்கழக சௌக்கிய பராமரிப்பு பீடம் மகப்பேற்று நிபுணர் கே.இ.கருணாகரன், மட்டக்களப்பு தமிழ் சங்க தலைவர் சைவப்புரவலர் வீ.ரஞ்சிதமூர்த்தி, கிழக்கு பல்கலைக்கழக சௌக்கிய பராமரிப்பு பீடம் மகப்பேற்று நிபுணர் எம்.திருக்குமார், பிராந்திய சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் என்.மயூரன் மற்றும் வைத்திய அதிகாரிகள், தாதிய உத்தியோகத்தர்கள் என சுகாதார துறைசார் உத்தியோகத்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
 
குறித்த நூல் வெளியிட்டு நிகழ்வில் நூல் நயவுரையினை கல்முனை வடக்கு ஆதாரவைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் ஆர்.முரளீஸ்வரன், நூல் மீளாய்வினை காரிகை கலை இலக்கிய கழகத்தின் தலைவர் ஜாகிதா ஜவால்தீன், ஏற்புரையினை நூலாசிரியர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை மகப்பேற்று நிபுணர் கந்தையா குருபரன் ஆகியோர் நிகழ்த்தியிருந்தனர்.
 
இதன்போது நூலாசிரியரினால் நூலின் பிரதிகள் அதிதிகள் உள்ளிட்ட அனைவரிற்கும் வழங்கி வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.