மட்டக்களப்பு இயற்கையின் மொழி அமைப்புடன் மட்டக்களப்பு லயன்ஸ் கழகமும் ஒருங்கிணைந்து புதிய வெளிச்சம் கனடா கிளையின் அனுசரணையுடன் நடாத்துகின்ற பயிற்சி பட்டறையில் இந்தியாவில் இருந்து வருகை தந்துள்ள இயற்கை விஞ்ஞானிகளின் வளவாளர்களாக கலந்துகொண்ட பயிற்சி பட்டறை மட்டக்களப்பு லயன்ஸ் கழக மண்டபத்தில் நடைபெற்றது
புதிய வெளிச்சம் கனடா கிளையினால் இலங்கையில் நாடுபூராவும் முன்னெடுத்து வரும் நஞ்சற்ற உணவு உற்பத்தியை வலுப்படுத்துவதற்கான பயிற்சி பட்டறையின் கிழக்குமாகாணத்திற்கான பயிற்சி பட்டறை மட்டக்களப்பில் நடைபெற்றது .
கிழக்குமாகாணத்தில் விவசாயத்துடன் தொடர்புடையவர்களின் இயற்கை வழி வேளாண்மையின் நஞ்சற்ற உணவு உற்பத்தி தொடர்பாக மட்டக்களப்பு லயன்ஸ் கழக மண்டபத்தில் நடாத்தப்பட்ட பயிற்சி பட்டறையில் வளவாளர்களாக புதிய வெளிச்சம் அமைப்பின் ஸ்தாபகர் நவஜீவன் ,தமிழ் நாடு இயற்கை வேளாண் விஞ்ஞானி சுந்தர ராமன் , தமிழ் நாடு இயற்கை வேளாண் விஞ்ஞானி பாமயன் , தமிழ்நாடு இயற்கை விவசாய பயிற்சியாளர் கஜேந்திர மூர்த்தி ,மட்டக்களப்பு லயன்ஸ் கழக விவசாய செயற்திட்ட பொறுப்பாளர் நோபில் மரியசீலன் , இயற்கை மொழி அமைப்பின் ஆலோசகர் கலாமதி மகேந்திர ராஜா , இயற்கை மொழியி அமைப்பின் ஸ்தாபகர் காயத்திரி உதயகுமார் மற்றும் பயிற்சியின் பங்காளர்களாக கிழக்குமாகாண விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள் , விவசாயிகள் கலந்துகொண்டனர்