பேச்சுவார்த்தையில் இந்தியா மத்தியஸ்தம் வகிக்க வேண்டும்

 

பேச்சுவார்த்தையில் இந்தியாவின் மத்தியஸ்தம் - விடுக்கப்பட்ட வலியுறுத்தல்! | India To Mediate The Talks North East Committee Sl

இனப்பிரச்சினை தீர்வு தொடர்பான பேச்சுவார்த்தையில் இந்தியா மத்தியஸ்தம் வகிக்க வேண்டும் என வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழு வலியுறுத்தல் விடுத்துள்ளது.

யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணை தூதரகத்தில், வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவினர் இந்திய துணை தூதுவர் ராகேஷ் நடராஜை இன்று சந்தித்து கலந்துரையாடினர்.

இந்தச் சந்திப்பு இன்று நண்பகலில் இடம் பெற்றது. தமிழ் மக்களின் அரசியல் தீர்வை நாடி வெளிநாட்டு தூதுவர்களை சந்திக்கும் நடவடிக்கையாகவே இந்த சந்திப்பு இடம் பெற்றதாக வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழு தெரிவித்தது.