சமூக வலைதளங்களில் பரப்பப்படும் பொய்யான செய்திகளை மக்கள் நம்ப வேண்டாம்- பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எச்.ஜே.எம்.சி. அமித் ஜயசுந்தர

 


2022 ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் ஜனவரி 27 ஆம் திகதிக்கு முன்னர் வெளியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எச்.ஜே.எம்.சி. அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

பரீட்சைக்கான விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணிகள் தற்போது இடம்பெற்று வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே சமூக வலைதளங்களில் பரப்பப்படும் பொய்யான செய்திகளை மக்கள் நம்ப வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

 தரம் 05 மாணவர்களுக்கான புலமைப்பரிசில் பரீட்சை கடந்த டிசெம்பர் 18 ஆம் திகதி பரீட்சை நடைபெற்றது.

2,894 பரீட்சை நிலையங்களில் நடைபெற்ற இத்தேர்வுக்கு மூன்று லட்சத்து 34,698 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.  

 இந்நிலையில், 2022 ஆம் ஆண்டுக்கான கபொத சாதாரண தரப் பரீட்சை இந்த மாதம் 23 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.