மட்டக்களப்பில் சமாதான நீதவான்களாக மூவர் நியமனம்!!

 



மட்டக்களப்பில் மூவர் சமாதான நீதவான்களாக மாவட்ட நீதிமன்றத்தில் மாவட்ட நீதவான் முன்னிலையில் (03) சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர்.
இவர்களில் மாணிக்கவாசகம் லிசோத்மன் மற்றும்
உருத்திரமூர்த்தி யுவநாதன் ஆகியோர் தீவு முழுவதற்குமான சமாதான நீதவான்களாகவும் சிவசம்பு சசிவரதன் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான சமாதான நீதவானாகவும் நியமனம் பெற்றுள்ளனர்.
இவர்கள் இதன்போது கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களை சந்தித்து கலந்துரையாடியதுடன், இராஜாங்க அமைச்சர் அவர்களுக்கு தனது வாழ்த்துகளையும் தெரிவித்தார்.