தேசிய கொடியை அரை கம்பத்தில் பறக்கவிடுமாறு, அறிவுறுத்தல்

 


முன்னாள் பரிசுத்தப் பாப்பரசர் 16 ஆம் பெனடிக்ட் திருத்தந்தைக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், தேசிய கொடியை அரை கம்பத்தில் பறக்கவிடுமாறு, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சின் ஊடாக சகல அரச நிறுவனங்களுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.

முன்னாள் பரிசுத்தப் பாப்பரசர் 16 ஆம் பெனடிக்ட் திருத்தந்தையின் மரண சடங்கு, நாளை (05) நடைபெற வுள்ளது.