மட்டக்களப்பில் நிர்க்கதியாகிய குடும்பத்திற்கு உதவிய தொழிலதிபர் செல்வராசா.















மட்டக்களப்பு ஆரையம்பதியில் ஏற்பட்ட தீ விபத்தினால் நிற்கதியாகிய 3 பேர் கொண்ட குடும்பத்திற்கு மட்டக்களப்பு வர்த்தக சங்கத்தின் தலைவரும் தொழிலதிபருமாகிய தேசபந்து எம்.செல்வராசா தாமாகவே முன்வந்து பல்வேறுபட்ட உதவியினை மேற்கொண்டுள்ளார்.

கடந்த 5 நாட்களுக்கு மேலாக நிற்கதியாகியிருந்த குடும்பத்தை நேரில் சென்று பார்வையிட்ட தொழிலதிபர் செல்வராசா, அவர்களுக்கு தேவையாக காணப்பட்ட பல்வேறுபட்ட தேவைகளை  நிவர்த்தி செய்து கொடுத்ததுடன், 50,000 ரூபாயினை பணமாகவும் கொடுத்து உதவியுள்ளார்.

மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி.சத்தியானந்தி நமசிவாயம் முன்னிலையில் சுமார் ஒரு இலட்சம் பெறுமதியான உதவியினை வழக்கியிருந்ததுடன், இதன்போது தொழிலதிபர் செல்வராசாவின் பாரியார், ஊடகவியளாளர்களான உ.உதயகாந்த், எம்.பாரீஸ் மற்றும் எஸ்.சஜீத் உள்ளிட்டவர்களும் கலந்துகொண்டுள்ளனர்.

காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குற்பட்ட ஆரையம்பதி செல்வாநகர் கிழக்கு நாவலர் வீதியில் அமைந்துள்ள குறித்த வீடு கடந்த  (31) திகதி இரவு 8.30 மணிக்கு திடீரென ஏற்பட்ட தீப்பரவலினால்  எரிந்து சாம்பலாகியுள்ளது.

முன்று பேர் கொண்ட குடும்பத்தின் உடு புடவை, தரம் 8 இல் கல்வி பயிலும் மகனின் கற்றல் உபகரணங்கள், ஜீபனோபாயத்திற்காக மேற்கொண்டு வந்த சுயதொழிலுக்கான உபகரணங்கள் (இடியப்பம் அவிக்கும் உபகரணங்கள்) உள்ளிட்ட அவர்களது சொத்துக்கள் அனைத்தும் தீயினால் எரிந்து சாம்பலாகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.