கிழக்குமாகாண கல்விப்பணிப்பாளர் அகிலா கனகசூரியத்தை வரவேற்கும் நிகழ்வு .


 

கிழக்குமாகாண கல்விப்பணிப்பாளர் அகிலா கனகசூரியத்தை வரவேற்கும் நிகழ்வு மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தில் நடைபெற்றது.

மட்டக்களப்பு மேற்கு வலயத்தின் மண்முனை மேற்கு கோட்ட பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள் ஒழுங்கு அமைப்பில் மண்முனை மேற்கு கோட்டக்கல்வி பணிப்பாளர் முருகேசுபிள்ளை தலைமையில் புதிதாக கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளராக பதவியினை பொறுப்பேற்றுக்கொண்ட மட்டக்களப்பு மேற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் அகிலா கனக சூரியத்தை வரவேற்கும் நிகழ்வு மண்முனை மேற்கு குறுஞ்சா முனை பாடசாலை பிரதான மண்டபத்தில் நடைபெற்றது

பாடசாலை அதிபர்களினால் மலர் மாலை அணிவிக்கப்பட்டு பாடசாலை மாணவர்களினால் பேண்ட் வாத்தியம் இசைக்கப்பட்டு அழைத்து வரப்பட்டு. பாடசாலை மாணவியின் வரவேற்பு நடனதுடன். பாடசாலை அதிபர்களின் வாழ்த்துரைகளுடன் கல்விப்பணிப்பாளர் அகிலா கனக சூறியம் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார். இந்நிகழ்வில் மட்டக்களப்பு மேற்கு வலயத்தின் மண்முனை மேற்கு கோட்ட பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்