உழவர் திருநாளாம் தைப் பொங்கல் தினத்தினை முன்னிட்டு வாகரை பிரதேசத்தில் வசிக்கும் ஆதிவாசி மக்களுக்கான பொங்கல் பொருட்கள் சமய வழிபாட்டு நிகழ்வுடன் இன்று வழங்கி வைக்கப்பட்டது.
ஆதிவாசி தலைவர் வேலாயுதம் மட்டக்களப்பு சமூக சேவையாளரான பிரபாகரனிடம் விடுத்த வேண்டுகோளின் அடிப்படையில் குஞ்சன் கல்குளம் மற்றும் இரண்டாம் கட்டை ஆகிய கிராமங்களில் வசிக்கும் சுமார் 120 குடும்பங்களுக்கான பொங்கல் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.
புலம்பெயர் நாடான லண்டனில் வசிக்கும் நல்லுள்ளம் கொண்டவரர்களான மார்கண்டு நேசன் குடும்ப்தினர் இதற்கான நிதி அனுசரனையினை வழங்கியிருந்தார்கள்.
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியினால் பொருட்களின்
விலையேற்றம் காரணமாக பொங்கல் தினத்தினை கொண்டாடுவதில் வறிய மக்கள் பலர்
பெரும் கஸ்ர நிலையினை எதிர்நோக்கி வருகின்றனர்.
இவ்வாறான நிலமைகளை
கவனத்தில் கொண்டு வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் தெரிவு
செய்யப்பட்டு இவ் மனித நேய உதவி வழங்கி வைக்கப்பட்டது.
இவ் உதவியினை வழங்கிய நன்கொடையாளர்களுக்கு ஆதி வாசிகள் சமூகம் தமது நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.