சபரிமலை யாத்திரி துப்பாக்கி தோட்டாக்களை கொண்டு செல்ல முயன்றது ஏன் ?

 


 

 சபரிமலை செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்துக்குச் சென்ற ஒருவர், விமான நிலையப் பாதுகாப்பு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள் ளார்.

சந்தேக நபரின் பொதிக்குள், ரி-56 துப்பாக்கிக்குரிய தோட்டாக்கள் இருந்ததால், சந்தேகத்தின் பேரில் இவர் கைது செய்யப்பட்டார். மேலதிக விசாரணைக ளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய காவல் நிலையத்தில் இவர் ஒப்படைக்கப்பட்டதாக விமான நிலையத்தின் சிரேஷ்ட அதிகாரி தெரிவித்தார்.

ஹற்றனை வசிப்பிடமாகக் கொண்ட 47 வயதானவரே கைதானார். வத்தளை பிரதேசத்திலுள்ள இரும்பு விற்பனை நிலையத்தில் கொள்வனவு செய்த இவர், அவற்றை இந்தியாவில் விற்பனை செய்யவிருந்தமை விசாரணையில் தெரிய வந்துள்ளது.

சந்தேக நபரின் பொதிக்குள்ளேயே ரி- 56 தோட்டாக்கள் கண்டெடுக்கப்பட்டன.