மியான்மாரில் தேவாலயம் மீது இராணுவம் நடத்திய வான்வழி தாக்குதலில் பச்சிளம் குழந்தை உட்பட ஐவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மியான்மரின் கிழக்கு பகுதியில் தாய்லாந்து நாட்டின் எல்லையையொட்டி அமைந்துள்ள கிராமங்களில் கரேன் பழங்குடியின மக்களின் கிளர்ச்சி குழு உள்ளது. இந்தக்குழு இராணுவத்துக்கு எதிரான தாக்குதல்களை நடத்தி வருகின்றது.
இந்த நிலையில் கடந்த வியாழக்கிழமை கரேன் பழங்குடியின மக்கள் வசிக்கும் 2 கிராமங்களில் திடீர் வான்வழி தாக்குதலை இராணுவம் நடத்தியது. அப்போது அந்த கிராமங்களில் உள்ள 2 தேவாலயங்கள் மீது போர் விமானங்கள் குண்டுகளை வீசின.
இதில் 2 வயது பச்சிளம் குழந்தை மற்றும் அதன் தாய் உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் டசின் கணக்கானோர் படுகாயம் அடைந்தனர்.