திருத்தப்பணிகள் காரணமாக இடைநிறுத்தப்பட்ட நுரைச்சோலை அனல்மின் நிலையத்தின் இரண்டாம் மின்னுற்பத்தி இயந்திரத்தை இன்று அல்லது நாளைய தினம் தேசிய மின்கட்டமைப்பில் இணைப்பதற்கு எதிர்ப்பார்ப்பதாக மின்சார சபை தெரிவித்துள்ளது.
திருத்தப் பணிகள் காரணமாக அதன் 270 மொகாவோட் மின்சார விநியோகம், தேசிய மின்கட்டமைப்பில் குறைவடைந்தது.
எனினும் மின்துண்டிப்பு காலத்தை குறைப்பதற்கான தீர்மானங்கள் குறித்த தகவல்கள் எவையும் இதுவரையில் வெளியாகவில்லை.
நேற்றைய தினம் நிலக்கரியை தாங்கிய கப்பல் ஒன்று புத்தளத்தை அடைந்ததுடன், இது இந்த ஆண்டு இலங்கையை வந்தடைந்த முதலாவது நிலக்கரி கப்பலாகும்.