வடகிழக்கில் எட்டு மாவட்டங்களிலும் பெரும்பான்மையினக்கட்சிகளின் ஆதரவு இல்லாமல் சபைகளை அமைக்கமுடியும் .

 


தமிழ் தேசிய கூட்டமைப்பில் உள்ள கட்சிகள் தனித்து உள்ளுராட்சிமன்ற தேர்தலில் களமிறங்குவதன் காரணமாக வடகிழக்கில் எட்டு மாவட்டங்களிலும் பெரும்பான்மையினக்கட்சிகளின் ஆதரவு இல்லாமல் சபைகளை அமைக்கமுடியும் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.

மட்டு.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
கடந்த காலத்தில் 18 வாக்குகளைப்பெற்றவர்களும் பிரதேசசபையின் தலைவர் பதிவிக்கு வரக்கூடிய சூழ்நிலையிருந்ததுடன் தமிழ் தேசிய கூட்டமைப்பு பெரும்பான்மை பலத்தை கொண்டிருந்தபோதும் சபைகளில் ஆட்சியமைப்பதில் பெரும் சில கஸ்டங்களையும் எதிர்கொண்டதாகவும் அவர் தெரிவித்தார்.