ஆசிரியர்களுக்கான பயிற்சிப் பட்டறையை சீரி மற்றும் மட்டக்களப்பு மாநகர சபை இணைந்து நடாத்தியது.


 

 மாணவர்களின் வாழ்வின் புத்துணர்ச்சி எனும் கருப்பொருளில் மாணவர்களின் நேர்மறையான சிந்தனையை மேம்படுத்துதல்
தொடர்பில் ஆசிரியர்களுக்கான பயிற்சிப் பட்டறையை சீரி மற்றும் மட்டக்களப்பு மாநகர சபை இணைந்து நடாத்தியது.
பயிற்சிப் பட்டறையில், மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட 50 ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்களில், அண்மித்த காலங்களில் காணப்படுகின்ற மாணவர்களின் மன விரக்தி
நிலையினைத் தடுக்கும் ஒரு நடவடிக்கையாக, மாணவர்களை புரிந்து கொள்ளல் மற்றும் மாணவர்களிடம் வௌ;வேறான உரையாடல்களை மேற்கொள்ளுதல்; போன்ற விடயங்கள் ஆசிரியர்களுக்குத் தெளிவுபடுத்தப்பட்டது.
பயிற்சி பட்டறையில் மட்டக்களப்பு வலயக் கல்வி அலுவலக ஆசிரிய ஆலோசர்கள் வளவாளராக கலந்து கொண்டனர்.