வாழைச்சேனையில் "அகரம்" கல்வி அபிவிருத்திக் கழகம் அமைப்பினால் கற்றல் உபகரணங்கள் வழங்கிவைப்பு.











வாழைச்சேனை இந்துக்கல்லூரி  பாடசாலையில்
"அகரம்" கல்வி அபிவிருத்திக் கழகம் அமைப்பினால் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கல் நிகழ்வானது  இடம்பெற்றது.

இந் நிகழ்வில் பாடசாலை அதிபர், உப அதிபர், ஆசிரியர்கள், பழைய மாணவர் சங்க உ.செயலாளர்,  மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

இவ் அமைப்பின் ஊடாக இச் செயற்பாட்டினை நடைமுறைப்படுத்துவதற்கு இப்பாடசாலையின் 2002 OL,  2005 AL கல்வியாண்டு பழைய மாணவர்கள் நிதியுதவி மற்றும் பங்களிப்பு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.