ஹபரன - கல்ஓயா பகுதியில் இன்று அதிகாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இவ்விபத்தில் மேலும் இரு யானைகளும் தொடரூந்தில் மோதுண்டு காயமடைந்துள்ளன.
காட்டு யானை மோதுண்டதில் தொடரூந்தின் முன் என்ஜின் பகுதி தடம் புரண்டுள்ளது.
இதன்காரணமாக கிழக்கு மாகாணத்துக்கான தொடரூந்து போக்குவரத்து இடை நிறுத்தப்பட்டுள்ளது.
கவுடுல்ல மற்றும் மின்னேரியா வனப்பகுதிகளில் உள்ள காட்டு யானைகள் கூட்டமாக தொடரூந்து பாதையை கடந்து செல்வதால் இந்த ஆபத்துகள் ஏற்படுவதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.
இந்த விபத்துக்குப் பிறகு, சுமார் 15 மீற்றர் தூரத்துக்கு யானை இழுத்துச்செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்தை எதிர்கொண்ட காட்டு யானை தொடரூந்தின் முன் என்ஜினில் சிக்கியுள்ளது
தொடரூந்தில் பயணித்தவர்களை ஹதரஸ்கொட்டுவ காவல்துறையினர், பேரூந்துகள் மூலம் அனுப்பி வைத்துள்ளனர்
இந்த விபத்தினால் தொடரூந்தில் பயணித்தவர்களுக்கு எவ்வித விபத்தும் ஏற்படவில்லை என்பதுடன் தொடரூந்து பாதையில் உள்ள 10 கொன்கிரீட் ஸ்லீப்பர்களும் உடைந்துள்ளன.
உயிரிழந்த காட்டு யானை 20 வயது மதிக்கத்தக்கதென வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்தனர்.