அரசாங்கம் முன்னெடுத்துள்ள புதிய வரிக்கொள்கையினை நிறுத்துமாறு கோரி
அரசாங்க ஊழியர்கள் முன்னெடுத்துவரும் கறுப்பு வாரத்தினை முன்னிட்டு
மட்டக்களப்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்று
முன்னெடுக்கப்பட்டது.
அரசாங்க
வைத்திய அதிகாரிகள் சங்கம்,பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின்
சம்மேளனம்,கிழக்கு பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம், இலங்கை வங்கி ஊழியர்கள்
சங்கம் என்பன இணைந்து மட்டக்களப்பு காந்திபூங்காவில்
ஒன்றுகூடி ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்தன.
வானளாவிய
உயரத்தில் பணவீக்கம் நடுவீதியில் அரச உத்தியோகத்தர்கள், வானுயரும்
வரிச்சுமை நாட்டை விட்டகலும் தொழில் வல்லுனர்கள் போன்ற கோசங்கள் எழுதப்பட்ட
பதாதைகளையும்
போராட்டக்காரர்கள் தாங்கியிருந்தனர்.
சட்ட விரோதமான
அரசாங்கத்தில் தன்னிச்சையான அடக்குமுறைகொண்ட வரிக்கொள்கைக்கு எதிராக எனும்
தலைப்பில் ஜனவரி 23ஆம் திகதி தொடக்கம் 27ஆம் திகதி வரையில் கறுப்பு வாரம்
அனுஸ்டிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.