வவுணதீவு பரமேஸ்வரா வித்தியாலயத்தில் பற்சிகிச்சை நிலையம் திறந்து வைப்பு!!




 
 
மண்முனை மேற்கு பிரதேச செயலக பிரிவில் அமைந்துள்ள வவுணதீவு பரமேஸ்வரா வித்தியாலயத்தில் பற்சிகிச்சை நிலையம் திறந்து வைக்கப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி குணசிங்கம் சுகுணன்,பிராந்திய பல் சத்திர சிகிச்சை நிபுணர் கே.முரளிதரன்அகியோரினால் நேற்று (12) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
மண்முனை மேற்கு பிரதேசத்தில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கும், கர்ப்பிணித்தாய்மார்களுக்கும் பற்களையும் வாய்ச்சுகாதாரத்தையும் பரிசோதனை செய்து தேவையானவர்களுக்கு சிகிச்சையளிக்கும் வேலைத்திட்டம் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பணிமனை அதிகாரிகளினால் வழங்கப்படுவதுடன் எதிர் வரும் காலங்களில் இப்பிரதேச மக்களுக்கும் சிகிச்சை வழங்க நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகளினால் தெரிவிக்கப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 126000 மாணவர்களின் பற்களையும் வாய்ச்சுகாதாரத்தையும் பரிசோதனை செய்து உறுதிப்படுத்துவதற்காக பிராந்திய சுகாதார நிலையங்களை வலுப்படுத்துவதுடன், பின்தங்கிய பிரதேசத்தில் பற்சிகிச்சை பெறமுடியாதுள்ள மக்களின் வாய்ச்சுகாதாரத்தை பரிசோதனை செய்து துரிதமாகாக சிகிச்சை வழங்குவதற்கு நவீன வசதிகளுடனான நடமாடும் பற்சிகிச்சை கூட சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இதன் போது வைத்திய கலாநிதி கு.சுகுணன் தெரிவித்தார்.
இந் நிகழ்வில் மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் எஸ்.சுதாகர், உதவி பிரதேச செயலாளர் சதா சுதாகரன், மண்முனை மேற்கு பிரதேச சபை தவிசாளர் எஸ்.சண்முகராஜா,பிராந்திய பல் சத்திர சிகிச்சை நிபுணர் கே.முரளிதரன், மண்முனை மேற்கு சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.அனட் ,உயிரியல் வைத்திய பொறியியலாளர் ஆர்.ரவிச்சந்திரன்மற்றும்,துறைசார் நிபுணர்கள்,மண்முனை மேற்கு கல்வி பணிப்பாளர் அனந்தரூபன், வவுணதீவு பரமேஸ்வரா வித்தியாலயத்தின் அதிபர் என்.கதிர்காமத்தம்பி, சுகாதார பிரிவின் உத்தியோகத்தர்கள் பலர் கலந்துகொண்டனர்.