நாடாளுமன்ற உறுப்பினர்கள் 208 பேரினது கல்வி தகைமை தொடர்பான விபரங்கள் தற்போது இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
இதனை பொதுமக்கள் அணுக முடியும் என்பதுடன், தமிழ் தேசியக் கூட்டமைப்பு உட்பட தமிழ் பேசும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் கல்வி தகைமையில் பின்தங்கியுள்ளமை தெரியவந்துள்ளது.
நாடாளுமன்றத்தில் உள்ள 208 உறுப்பினர்கள் தமது கல்வி மற்றும் தொழில் தகைமைகளை நாடாளுமன்ற செயலகத்திற்கு அறிவித்துள்ளனர்.
எனினும் 17 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது தகவல்களை நாடாளுமன்ற செயலகத்திடம் ஒப்படைக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
தகவல் அறியும் உரிமை ஆணைக்குழு பிறப்பித்த உத்தரவின் பிரகாரம், இந்த விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
நாடாளுமன்ற உறுப்பினர்களின் விவரங்களை www.parliament.lk என்ற நாடாளுமன்ற இணையத்தளத்தில் பார்வையிட முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.