கோறளைப்பற்று, வாழைச்சேனை பிரதேச செயலகத்தின் தைப்பொங்கல் விழா 20.01.2023 ம் திகதி வெள்ளிக்கிழமை காலை 8.30 மணிக்கு பிரதேச செயலாளர் திருமதி.ஜெயானந்தி திருச்செல்வம் அவர்களின் தலைமையில் மட்/ககு/முறாவோடை சக்தி வித்தியாலய மாணவர்கள் மற்றும் கோறளைப்பற்று பிரதேச அறநெறிப்பாடசாலை மாணவர்களின் கலாசார பண்பாட்டு ஊர்வல நிகழ்வு மற்றும் கலை நிகழ்வுகளுடன் முறாவோடை அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலய வளாகத்தில் கோறளைப்பற்று பிரதேசத்தின் அனைத்து கிராம உத்தியோகத்தர் பிரிவுகளையும் சேர்ந்த மக்களின் பங்குபற்றலுடனும் முறாவோடை கிராமத்தின் சமய, சமூக அமைப்புக்களின் பூரண ஒத்துழைப்புடனும் கோலாகலமாக இடம்பெற்றது.