அதிபர் மாளிகையிலிருந்த பணம் காணாமற்போனமை தொடர்பான வழக்கில் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகேவிற்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த பிணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
அதிபர் செயலகத்திற்குள் நுழைந்த 72 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
கோட்டை காவல் நிலையம் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகேவை வழக்கின் 73 ஆவது சந்தேகநபராக பெயரிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.