ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுக்கும் ஐக்கிய தேசிய கட்சிக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.
குறித்த சந்திப்பில் பெசில் ராஜபக்ஷ தலைமையில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவும், வஜிர அபேவர்தன தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சியும் கொழும்பில் கூடியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தநிலையில், பொதுஜன பெரமுன சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜொன்ச்டன் பெர்ணான்டோ, மஹிந்தானந்த அலுத்கமகே உள்ளிட்ட ஆறுபேர் பங்குபற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, ஐக்கிய தேசிய கட்சி சார்பில் ரவி கருணாநாயக்க, அகில விராஜ் காரியவசம் உள்ளிட்ட குழுவினர் பங்கு பற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த கூட்டத்தில், தற்போது நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி தொடர்பில், விரிவாக ஆராயப்பட்டுள்ளது.
அத்துடன், இந்த சந்திப்பில், மக்கள் எதிர்நோக்கும் அன்றாட பிரச்சினைகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இந்தநிலையில், எதிர்வரும் உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் இரு கட்சிகளும் இணைந்து போட்டியிடுவது குறித்தும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.