சர்வதேச விமான நிலையத்தின் ஓடுபாதையில் பயணிகள் விமானம் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

 


நேபாளம் பொக்காரா சர்வதேச விமான நிலையத்தின் ஓடுபாதையில் பயணிகள் விமானம் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

மீட்பு பணிகள் நடந்து வரும் நிலையில், விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

இதுவரை 16 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் சிக்கிய விமானத்தில் 68 பயணிகளும் மூன்று விமான குழுவினரும் பயணம் செய்துள்ளனர்.

மலேசியா காத்மாண்டுவில் இருந்து நேபாளம் கஸ்கி மாவட்டத்தில் உள்ள பொக்காரா சர்வதேச விமான நிலையத்திற்கு சென்ற எட்டி ஏர்லைன்ஸின் விமானமே விபத்துக்குள்ளாகியுள்ளது.