சட்டவிரோதமாக மின் இணைப்பை வழங்கிய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்

 


புங்குடுதீவு ஏழாம் வட்டாரத்தில், சட்டவிரோதமாக மின் இணைப்பை பிறிதொரு வீட்டுக்கு வழங்கிய நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்தனர்.

மின்மானியை சேதப்படுத்தி, அயல் வீட்டுக்கு மின்சாரத்தை குறித்த நபர் வழங்கி வந்துள்ளார். கிடைக்கப்பெற்ற தகவலுக்கு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.