சீயோன் தேவாலயத்தின் பிரதம போதகர் ரொசான் மகேசன் தலைமையில் இடம்பெற்ற புத்தாண்டை வரவேற்கும் நள்ளிரவு ஆராதனையில் பெருந்திரளான இறைவிசுவாசிகள் நாட்டின் பல பாகங்களிலும் இருந்து கலந்துகொண்டதுடன், இறை பிரார்த்தனையிலும் ஈடுபட்டிருந்தனர்.
இதன்போது கடந்த வருடம் முழுதுதும் அனைத்து இறைமக்களையும் பாதுகாத்து வழிநடாத்திய ஆண்டவரிற்கு நன்றி கூறி துதிபாடி வழிபட்டதுடன், இவ்வாண்டும் அனைவரையும் பாதுகாத்து வழிநடாத்துவதுடன், நாட்டில் சாந்தியும் சமாதானமும் நிலவ வேண்டுமென இறையசிவேண்டியும் பிரார்த்தனைகளில் ஈடுபட்டனர்.
நாட்டின் பல பாகங்களிலும் இருந்தும் அதிகளவிலான இறைவிசுவாசிகள் புத்தாண்டை வரவேற்கும் விசேட நள்ளிரவு ஆராதனையில் கலந்துகொண்டிருந்ததுடன், தேவாலய வளாகத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.