தனித்துக் களமிறங்கும் முடிவைத் இலங்கைத் தமிழரசுக் கட்சி எடுத்துள்ள நிலையில், அதை நோக்கிப் பயணிக்கும் .

 


தொழில்நுட்ப ரீதியில் ஆராய்ந்து, தனித்துக் களமிறங்கும் முடிவைத் இலங்கைத் தமிழரசுக் கட்சி எடுத்துள்ள நிலையில், அதை நோக்கிப் பயணிக்கவுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு நியூ கோட்டைமுனை விளையாட்டுக் கழகத்தின் விளையாட்டு நிகழ்வில் பிரதம அதிதியாகப் பங்கேற்று உரையாற்றும்போதே அவர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு நியூ கோட்டைமுனை விளையாட்டுக் கழகத்தின், கோட்டைமுனை பிறிமியர் லீக் கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் ஆரம்ப நிகழ்வு, மட்டக்களப்பு இந்துக் கல்லூரி மைதானத்தில் நேற்று இடம்பெற்றது.
இந்தச் சுற்றுப்போட்டியில் ஆறு கழகங்கள் பங்குபற்றுகின்றன.
போட்டியின் ஆரம்ப நிகழ்வின்போது, பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன.