ஈழத்தின் முதலாவது இலக்கண சஞ்சிகை மட்டக்களப்பில் வெளியீடு.

 





ஓய்வு பெற்ற தமிழ் ஆசிரியர் த.யுவராஜன் அவர்களால் தொகுத்தளிக்கப்பட்ட இலக்கணத்துக்கான முதல் சஞ்சிகை  அவரது இல்லத்தில் கடந்த ஞாயிறன்று(22)எளிமையாக நடைபெற்றது.

 பிரதம அதிதியாக ஓய்வுநிலைப் பேராசிரியர் செ.யோகராசா அவர்களின் முன்னிலையில், மட்டக்களப்பு மாவட்ட கல்வி வலயங்களிலிருந்து ஆசிரிய ஆலோசகர்களும் முதன்மை ஆசிரியர்களும் உதவிக்கல்விப்பணிப்பாளர்களும் அழைக்கப்பட்டு , சிறுமி ஒருவரின் வாழ்த்துப்பாவுடனும் சஞ்சிகை வெளியிட்டு வைக்கப்பட்டது.

 மிகுந்த நகைச்சுவையும் எளிமையும் மிக்க அசிரியர் த.யுவராஜன் நகைசௌசுவையுடன் ஆரம்பஉரை நிகழ்த்தி மகிழ்வித்தார்.

தலைக்கனமின்றி இலக்கணத்தை பயிலும் அனைவருக்கும் பயனுடைய சஞ்சிகையாக இது வெளிவந்துள்து. தமிழிலக்கணத்தை வாணாளில் பயில ஆர்வமான  அனைவரும் பயனுறும் வகையில் கட்டுரைகளாக சிறு துணுக்குககளாக விளக்கங்களாக வினாவிடைகளாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர் யுவராஜன் அவர்கள் தனது  இலக்கண ஆசிரியரர்களை அட்டைப்படத்திலும் தன்வீட்டிலும் காட்சிப்படுத்தியுள்ளமை மிகுந்த மகிழ்வையும் நெகிழ்வையும் தந்தது. மடௌடக்களப்பு அபிராமி வெளியீடாக வெளிவந்துள்ள இச்சஞ்சிகையின் விலை 300ரூபா ட்டுமே.