வீடற்ற இரண்டு குடும்பங்களுக்கு புதிய வீடுகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

 


 அம்பாறை திருக்கோவிலில் இலங்கை மேல்மருவத்தூர் அருள்மிகு ஆதிபராசக்தி சித்தர்பீடத்தின் அறப்பணி மையத்தின் ஊடாக செயற்பாட்டாளர்களின் ஒழுங்கமைப்பில் தாண்டியடி கிராமத்தில் வீடற்ற இரண்டு குடும்பங்களுக்கு புதிய வீடுகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
நிகழ்வில் பிரதேச செயலாளர் ரீ.கஜேந்திரன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு பயனாளிகளிடம் வீடுகளை கையளித்து இருந்ததுடன் உதவிப் பிரதேச செயலாளர் கே.சதிசேகரன் மற்றும் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்,பயனாளிகள் என பலரும் கலந்துகொண்டனர்.