மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிரான்குளம் பகுதியில்
உள்ள நீர்நிலையிருந்து பெண் ஒருவர் சடலம் மீட்கப்பட்டுள்ளார்.
சடலமாக மீட்கப்பட்டவர் கடந்த 26ம் திகதி வீட்டிலிருந்து வெளியேறி மீண்;டும் வீடு திரும்பவில்லை என காத்தான்குடிப் பொலிஸ்நிலையத்தில்
முறைப்பாடொன்றும் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
கிரான்குளம்
பகுதியில் உள்ள தோட்டம் ஒன்றின் உரிமையாளர் குறித்த பகுதியில் சடலம்
ஒன்றுகிடப்பதை இனங்கண்டு பொலிஸாருக்குத் தெரியப்படுத்தினார்.
பொலிஸார்
மேலதிக விசாரணைகளை முன்னெடுத்த போது, சடலம் கடந்த 26ம் திகதி காணமல்போன
நபரினுடையது என உறவினர்கள் அடையாளங்காட்டியிருந்தனர்..
கிரான்குளம்,ஆலயடி வீதி; சேர்ந்த 72 வயதுடைய 3 பிள்ளைகளின் தாயாரான கந்தப்பெண் பிள்ளையம்மா என்பவரே சடலமாக மீட்கப்பட்டவராவர்.
மட்டக்களப்பு
நீதிமன்ற பதில் நீதவானின் உத்தரவுக்கு அமைவாக சம்பவ இடத்துக்கு சென்ற
மண்டூர் பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி தம்பிப்பிள்ளை தவக்குமார்,
சடலத்தை பார்வையிட்டு, உடற்கூறு பரிசோதனையின் பின்னர் சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைக்கும் படி பொலீசாருக்கு உத்தரவிட்டார்.