பேராதனை பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் நடத்திய போராட்டத்தை கலைப்பதற்காக பேராதனையில் காவல்துறையினர் நீர்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
இதன் காரணமாக கொழும்பு பிரதான வீதியானது பேராதனை பல்கலைக்கழகத்திற்கு முன்பாக சில மணிநேரம் தடைப்பட்டிருந்தது.
பேராதனை பல்கலைக்கழகத்தின் தலைவர் உள்ளிட்ட பல்கலைக்கழக மாணவர்களை விடுதலை செய்யுமாறு கோரி பேராதனை பல்கலைக்கழக பொது மாணவர் ஒன்றியம் இந்த எதிர்ப்பு பேரணியை ஆரம்பித்துள்ளது.