ஏறாவூர் இளைஞர், சவூதி அரேபியாவில் விபத்தில் உயிரிழந்துள்ளார்.

 

 


ஏறாவூர்,  மீராகேணியை சேர்ந்த முஹமது ஹபீப் (வயது 25) எனும் இளைஞர், சவூதி அரேபியாவில் விபத்தில் வெள்ளிக்கிழமை (06) உயிரிழந்துள்ளார்.

 ஒருவருடத்துக்கு முன்னர், சவூதி அரேபியாவுக்கு சாரதி தொழிலுக்காக சென்ற இவர், அபஹா எனும் இடத்தில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றின் போதே உயிரிழந்ததாக கூறப்படுகின்றது.