ஓமானில் இலங்கை பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.



ஓமான், மஸ்கட்டிலுள்ள இலங்கை தூதரகத்தின் பாதுகாப்பு இல்லத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த இலங்கை பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

இலங்கைக்கு புறப்படுவதற்கு தயாராக இலங்கை தூதரகத்தின் பாதுகாப்பு இல்லத்தில் தங்கவைக்கப்பட்டிருந்தபோது, இந்தப் பெண் திடீரென சுகயீனமடைந்துள்ளார்.

அதன்பின்னர் சிகிச்சைகளுக்காக ஓமான் வைத்தியசாலையொன்றில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்ததாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

மஹவ, தலதாகம பிரதேசத்தைச் சேர்ந்த 67 வயதான பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.