மட்டக்களப்பு வாழைச்சேனை வனவள காரியலாயத்திற்குட்பட்ட கிரான் மற்றும் வாகரை
வனப்
பகுதியில் விசேட அதிரடிப் படையினரின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட திடிர்
சுற்றி வளைப்பின் போது சட்டவிரோத மணல் அகழ்வு மற்றும் மரக் கடத்தல் என்பன
முறியடிக்கப்பட்டன.
சட்டவிரோதமாகக் கடத்தப்பட்ட மரங்கள் மற்றும் மணல் என்பன கைப்பற்றப்பட்டதோடு, அவற்றைக் கடத்துவதற்குப் பயன்படுத்தப்பட்ட
7 உழவு இயந்திரங்களும் மீட்கப்பட்டுள்ளன.
இந்தச் சம்பவம் தொடர்பில் எண்மர் கைது செய்யப்பட்ட நிலையில், பலர் தப்பியோடியுள்ளனர்.
மட்டக்களப்பு
மேலதிக மாவட்ட வன அதிகாரி எம்.ஏ. ஜாயா வாழைச்சேனை வட்டார வன அதிகாரி
நா.நடேசன் ஆகியோரின் பணிப்புரையின் பேரில் இந்தச் சுற்றிவளைப்பு நடவடிக்கை
முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.