முட்டைகளை இறக்குமதி செய்வதால் நாட்டுக்கு பறவைக் காய்ச்சல் அபாயம் ஏற்படக்கூடும்.

 


நாட்டில் நிலவும் முட்டைத் தட்டுப்பாட்டை கருத்திற் கொண்டு முட்டையை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ள நிலையில், வெளிநாடுகளில் இருந்து முட்டைகளை இறக்குமதி செய்வதால் நாட்டுக்கு பறவைக் காய்ச்சல் அபாயம் ஏற்படக்கூடும் என்று அரச கால்நடை வைத்திய அதிகாரிகள் சங்க தலைவர் சிசிர பியசிறி எச்சரிக்கை விடுத்தார்.

கொழும்பில் செவ்வாய்க்கிழமை (03) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் மேற்குறிப்பிட்ட விடயத்தைத் தெரிவித்த அவர், இறக்குமதி தீர்மானத்தை மீள்பரிசீலனை செய்யுமாறு அரசாங்கத்தை வலியுறுத்தினார்.

விடயதானத்துடன் தொடர்புடைய துறையினரால் பறவைக் காய்ச்சலை தடுக்க மேற்கொள்ளப்பட்டு வரும் பிரயத்தனங்கள் மேற்குறிப்பிட்ட தீர்மானத்தால் பாதாளத்துக்கு செல்லும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.