அச்சுவேலி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புன்னாலைக்கட்டுவன் பகுதியில் 18 வயதுடைய ஆண் ஒருவரும் 25 வயதுடைய பெண் ஒருவரும் 400 (40 காட்) போதை மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காங்கேசன்துறை விசேட மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரின் சுற்றிவளைப்பில் குறித்த சந்தேகநபர்கள் இருவரும் நேற்றையதினம் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் பாரப்படுத்தப்பட்டனர்.
அவர்களை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான
நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.