பாடசாலை மாணவர்களின் புத்தக பைகளை சோதனையிடுவதற்காக பொலிஸ் அதிகாரிகளை ஈடுபடுத்த வேண்டாம் அதிரடி உத்தரவு .


 

பாடசாலை மாணவர்களின் புத்தக பைகளை சோதனையிடுவதற்காக பொலிஸ் அதிகாரிகளை ஈடுபடுத்த வேண்டாம் என ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக மேல் மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.

எந்தவொரு பாடசாலை மாணவர்களினதும் புத்தகப் பைகளை சோதனையிட வேண்டாம் என பொலிஸ்மா அதிபர் அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.

பாடசாலைகளில் போதைப்பொருள் தொடர்பான சோதனைகளை நிர்வாகம், பெற்றோர், பழைய மாணவர்கள் ஆகியோர் ஒன்றிணைந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.