தைத்திருநாளை முன்னிட்டு மட்டக்களப்பில் இடம்பெற்ற விஷேட பூசை வழிபாடுகள்!!

 























மட்டக்களப்பு ஸ்ரீ விஸ்வரூப ஆஞ்சநேயர் ஆலயத்தில் இடம்பெற்ற தைப்பொங்கல் விஷேட பூஜை வழிபாடுகள் இன்று இடம்பெற்றது.
உழவர் திருநாளாம் தைத்திருநாளை முன்னிட்டு இன்று உலக வாழ் தமிழர்கள் சூரிய பகவானுக்கு நன்றி செலுத்தும் முகமாக தைப்பொங்களை வெகுவிமர்சையாக கொண்டாடி வருகின்றனர்.
அந்த வகையில் மட்டக்களப்பிலுள்ள இந்து ஆலயங்களிலும் பொங்கல் பொங்கி விசேட பூசை வழிபாடுகள் இடம்பெற்றன.
மட்டக்களப்பு பிள்ளையாரடி ஸ்ரீ விஸ்வரூப ஆஞ்சநேயர் ஆலயத்தில் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ உத்தம ஜெகதீஸ்வர குருக்கள் தலைமையில்
பொங்கல் பொங்கி விசேட பூசை வழிபாடுகள் இடம்பெற்றன.
அதேவேளை மட்டக்களப்பில் உள்ள கத்தோலிக்க ஆலயங்களிலும், வியாபார நிலையங்கள் மற்றும் வீடுகளிலும் பொங்கல் பொங்கி சூரியனுக்கு நன்றி செலுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.