காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் நடைபெற்ற புதிய ஆண்டில் கடமைகளை பொறுப்பேற்க்கும் சத்தியப்பிரமாண நிகழ்வு.

 






புதுவருடத்தினை முன்னிட்டு அரச உத்தியோகத்தர்கள் கடமைகளை பொறுப்பேற்கும் நிகழ்வு இன்று (02) நாடளாவிய ரீதியில் இடம்பெற்றதுடன் காத்தான்குடி பொலிஸ் நிலையத்திலும் கடமைகளை பொறுப்பேற்கும் சத்தியப்பிரமாண நிகழ்வு காலை 9.00 மணிக்கு பொலிஸ் நிலைய வளாகத்தில் இடம்பெற்றது.
காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி துமிந்த நயனசிறீ தலைமையில் சத்தியப்பிரமாணம் செய்து 2023 புதிய ஆண்டில் தமது கடமைகளை பொலிஸார் பொறுப்பெற்றுக் கொண்டனர்.