சுவிஸ் கிராமத்தில் சுமார் 16 பவுன் தங்க நகைகள் மற்றும் ஐந்தாயிரம் ரொக்கப் பணம் திருடப்பட்டிருந்ததை, கொக்குவில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டது.
கொக்குவில் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.கே. யு.பி விமலரத்ன, பெரும்குற்ற பிரிவின் பொறுப்பதிகாரி பி. சசிந்திரா மற்றும்,சிரேஷ்ட புலனாய்வு உத்தியோகத்தர் ஆர். நவராஜன், ஆகியோர் தலைமையிலான குழுவினர் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையினால் நேற்று சத்துருக்கொண்டான் பகுதியில் மூன்று சந்தேக நபர்களை மடக்கிப்பிடித்ததுடன், ஒருவர் தலைமறைவாகி உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கொக்குவில் பொலிஸாரின் சுற்றுவளைப்பு நடவடிக்கையினால் திருடப்பட்ட தங்க நகைகள் கைப்பற்றப்பட்டதுடன். திருட்டு நடவடிக்கைக்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் வண்டியும், துவிச்சக்கர வண்டியும் கைப்பற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.