சமாரியனின் கரங்கள் அமைப்பினால் பாடசாலைக்கு கணனிகள் வழங்கும் நிகழ்வு .

 


மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட மட்டக்களப்பு மண்முனை வடக்கு கல்வி கோட்டத்தில் உள்ள பாடசாலையான அறுனோதயா பாடசாலையின் பெற்றோராகிய சில்வெஸ்டரினால் சமாரியனின் கரங்கள் அமைப்பிற்கு விடுக்கப்பட்ட விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு இணங்க சமாரியனின் கரங்கள் அமைப்பினால்  பாடசாலைக்கான கணணிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன

மட்டக்களப்பு பாடசாலை அதிபர் பவள சாந்தி பிளேம்குமார் தலைமையில் நடைபெற்ற கணனி கையளிக்கும் நிகழ்வில் மட்டக்களப்பு வலயக்கல்வி அலுவலக ஆரம்பப் பிரிவு உதவிக்கல்வி பணிப்பாளரும் வலுவூட்டப்பட்ட. அறுனோதயா பாட சாலையின் மேம்பாட்டு இணைப்பாளருமான உமாபதி விவேகானந்தம் ,சமாரியனின் கரங்கள் அமைப்பின் இலங்கை நாட்டுக்கான பணிப்பாளரும் ஐ ட்றேன் அமைப்பின் இணைப்பாளருமான டி .ஹரிசங்கர் ஆகியோர் அதிதியாக கலந்துகொண்டார்.

இனி நிகழ்வில் பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர் டி. கோணேஸ்வரன் , சமாரியன் கரங்கள் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் வி .பிரதீப் மற்றும் பாடசாலை ஆசிரியர்கள் கலந்துகொண்டனர் .